வேதாத்திரியத்தின் 14 திட்டங்கள்

 வேதாத்திரியத்தின் 14 திட்டங்கள் 


தனிமனிதப் பண்பாடு வேதாத்திரியத்தில் ஐந்தாவது திட்டமாக உள்ளடங்கி உள்ளது. இப்போது ஒட்டு மொத்தப் பார்வையாக வேதாத்திரியத்தின் 14 திட்டங்களைப் பார்ப்போம். 



திட்டம் 1 : போரில்லா நல்லுலகம் : 

போர் என்பது மனிதனை மனிதனே தனித் தனியாகவோ, கூட்டாகவோ கொன்று குவிக்கும் கொடிய செயல். நாம் வாழப் பிறந்து விட்டோம்.

 வாழ்வதற்கு விரிந்த உலகம். இருக்கிறது. இயற்கை வளங்கள் பலவும் உள்ளன. ஒருவரோடு ஒருவர் ஒத்தும் உதவியும் இயற்கை வளங்களை அனுபவித்து இன்புற்று வாழ வேண்டும். உலகில் இதுவரையில் எத்தனையோ போர்கள் நடந்து விட்டன. அவற்றுக்குக் காரணம் என்ன? என்ன நன்மை யாருக்கு விளைந்தது? இன்னும் போர் உலகுக்குத் தேவைதானா? இதுபோன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு ஆராய  வேண்டும். போர் என்பதை மனிதகுலத்திலிருந்து அடியோடு ஒழித்துவிட வேண்டும். 

திட்டம் 2 : பொருள்துறையில் சமநீதி : 

பொருளாதாரத் துறையில் எல்லோருக்கும் சமநீதி வேண்டும். பொருள் துறையில் பணம் என்பது உழைப்பின் அடையாளம் (Token of labour is Money).

 இயற்கை வளம் எளிதாக அனைவருக்கும் சுலபமாகக் கிடைக்கிறது. உழைப்பின் பலனாகக் கிடைக்கின்ற பொருட்களையும், செல்வத்தையும் மனிதன் பகிர்ந்து அனுபவித்து வாழ வேண்டும்.

 திட்டம் 3: நேர்மையான நீதிமுறை : 

மனித வாழ்வுக்கு ஒத்ததான உயர்ந்த பண்பாடு நேர்மையான நீதிமுறை, இது அவ்வப்போது ஒவ்வொரு நாட்டின் அரசியல் தலைவர்களால் வகுக்கப்பட்டுப் பின்பற்றப் படுகிறது. அரசியல் தலைவர்களோ, மனித வாழ்வைப் பற்றி தத்துவம்,

 விஞ்ஞானம் என்கின்ற இரு துறைகளிலும் சிந்தனையின் மூலம் முழுமையாக அறிந்து கொள்ளா தவர்கள். இதனால்,  இன்று வரையில் அப்பழுக்கு அற்ற நீதிமுறையும் அதை செயல் படுத்துகின்ற முறையும் உலகிலுள்ள எந்த நாட்டிலும் உருவாகவில்லை. எனவே, நீதித் துறையில் இயற்கைக்கு முரண்படாத நேர்மை வேண்டும். 

திட்டம் 4 : நிலவுலகுக்கோர் ஆட்சி : 

உலகில் பிறந்து வாழும் எல்லா மக்களுக்கும் சம உரிமையும், சம பிரதிநிதித்துவமும் அளிக்கத்தக்க முறையில் எல்லா நாடுகளையும் இணைத்த, எல்லா நாட்டு ஆட்சிக்கும். 

மேலாதிக்கம் உடைய, ஓர் உலகப் பேரரசு ஜனநாயக முறையில் அமைக்கப்பட வேண்டும். செயல்புரியவும் வேண்டும். மக்களனைவருக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், உலக மக்கள் அனைவரும் ஆட்சியில் பங்கு கொள்ளத்தக்க வகையிலும் உலகப் பொது ஆட்சி வேண்டும். 

திட்டம் 5 : சீர் செய்த பண்பாடு : 

தனிமனிதனுக்கு ஐந்தொழுக்கப் பண்பாடு வேண்டும். தனிமனித அமைதி மூலம் தான் உலக அமைதி கிடைக்கும். எனவே, ஒவ்வொரு மளிதனும் இந்த ஐந்தொழுக்கப் பண்பாட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகிறது. 

திட்டம் 6:சிந்தனையோர் வழி வாழ்வு: 

முற்றும் உணர்ந்த சிந்தனையாளர்களது வழியில் வாழவேண்டும். ஏனெனில், காலங்காலமாக மனிதனுடைய வாழ்க்கை சிலருடைய தவறான செயல்களினால் 

நலம் குலைந்து போகின்றது. அதனை இக்காலத்திற்கு ஏற்றவாறு சிந்தனையாளர்களைக் கொண்டு திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 உலகில் உள்ள மக்கள் அனைவரும் அறிவிலும் செயல்முறையிலும் வேறுபட்டு இருப்பதால், அனைவருமே சிந்தனையோர் காட்டிய வாழ்க்கை நெறியில் வாழ்வதுதான் பாதுகாப்பானது. வெற்றியும் அமைதியும் அளிக்கவல்லது. 

 திட்டம் 7 : சிறப்புணர்ந்த பெண் மதிப்பு : 

சமுதாயத்தில் பெண்களுடைய தொண்டும் அறிவும் மிகவும் அவசியமானவை மதிப்புடையவை: பயன்தரத் தக்கவை. இந்த மதிப்பைப் பல இடங்களில் உணர் காரணத்தினால், ஆணாதிக்கச் செயல்கள் மூலம்  பெண்குலம் அவமதிப்புக்கும் ஏழ்மைக்கும். அடிமைத்தனத்திற்கும் ஆளாகி வருகிறது. இதனைச் சீர்திருந்தி பெண்மையின் 

பெருமையை அனைவரும் உணர்ந்து மதித்து வாழத்தக்க வாழ்கவு நெறி அவசியம். 

திட்டம் 8: தெய்வநீதி வழி வாழ்தல் : 

இறைநிலை என்பது ஆற்றலும் (Self compressive pressure force) அறிவும் (Consciousness) கொண்டு, தன்மாற்ற நிகழ்ச்சியால் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து முறையாகக் காத்து வருகின்றது. மனிதன் தன்முனைப்பினால் இறையாற்றலின் மதிப்பை உணராது 

செயல் புரிந்து, சமுதாயத்தைச் சிக்கலில் ஆழ்த்தி வருகின்றாள். இந்தத் தவறு எழாமல் காத்துச் சமுதாயத்தை மேன்மைப்படுத்த வேண்டியது அறிஞர்கள் கடமையாகும். 

திட்டம் 9 : தேர்த்திருவிழா தவிர்த்தல் : 

வியாபார நோக்கத்தோடு தெய்வத்தின் பெயரால் மக்களைக் கூட வைத்து சுகாதாரக் குறைவு. பண்பாட்டைச் சீர்குலைக்கும் கலை நிகழ்ச்சிகள். சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் இவற்றை ஏற்படுத்தும் தேர்த்திருவிழாவை தவிர்ப்பது இக்காலத்திற்கு நன்மையாக அமையும். 

திட்டம் 10 : சிறுவர்கட்கே விளையாட்டு : 

தனிமனிதர்களுக்கு இடையேயும். நாடுகளுக்கிடைபேயும் போட்டி, பொறாமை. பகை முதலியவற்றை இக்காலத்தில் விளையாட்டு  உண்டாக்குகிறது. வயதானவர்கள் உடலை வருத்தி விளையாடும்போது எலும்பு, தசைகள் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. 

எளிமையான உடற்பயிற்சியே வயதானவர்களுக்குப் போதுமானது. எனவே. விளையாட்டு என்ற திட்டத்தைப் பள்ளியில் படிக்கின்ற 

சிறுவர்களின் உடல் வளத்தையும், மன நலத்தையும் காக்க மாத்திரம் உரியதாகக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். 

திட்டம் 11 : செயல் விளைவு உணர் கல்வி : ஒவ்வொரு செயலுக்கும் தக்க விளைவு உண்டு என்பது இறைநீதியாகும். எண்ணம், சொல், செயல்  என்ற மூன்றாலும் மனிதன் செயல்புரிகிறான். விளைவு நான்கு வகைப்படும். அவை : இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்பனவாகும். எனவே, 'எனக்கு என்ன வேண்டும்? அதை எந்தச் செயல் மூலம் முறையாகப் பெறலாம்?' என்று எண்ணி, உரிய முறையில் செயலாற்றி வேண்டிய பெருமைகளைப் பெற்று வாழ்வில் இன்பமுற வேண்டும். இதுவே செயல்விளைவுத் தத்துவம், 

திட்டம் 12 : சீர்காந்த நிலை விளக்கம் : 

இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் காந்தம் என்ற பேராற்றல் இயற்கையிலும், செயற்கை யிலும் முக்கியமானதாக விளங்குகிறது. விஞ்ஞான வளர்ச்சியில் பெருமளவில் உள்ள இக்காலத்திலும் அதைப் பற்றிய மதிப்பை மனிதகுலம் உணர்ந்து கொள்ளவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

திட்டம் 13 : உணவு நீர் பொதுவாக்கல் : 

மனிதஇன வாழ்க்கைக்கு உணவும், தண்ணீகும் அவசியமானவை. இவ்வியற்கைச் செல்வங்களைத் தனிமனிதனோ, மனிதக் குழுக்களோ தங்களுக்கிடையே போட்டியின்றி அனுபவிக்க வேண்டும். வெயிலைப் போன்று. காற்றைப் போன்று, உணவும் நீரும் உலகப் பொதுவாக அமைய வேண்டும். 

திட்டம் 14: உண்மை ஒன்றை வழிபடுதல் : 

மனித இன வாழ்க்கையில் இறையாற்றல் முதன்மையானது. அந்த ஆற்றலைப் பகுதி பகுதியாகப் பயன்படுத்தி மனித வாழ்வு நடைபெற்று வருகிறது. இறைநிலை என்பது ஒன்றுக்கு மேல் இருக்க முடியாது. இதனைத் திரித்துக் கூறி மக்களிடம் மதப் போராட்டமும் பிணக்குகளும் மிகுந்து. எத்தனையோ குழப்பங்களும் போர்களும் நடந்து விட்டன. இனி அவ்வாறு குழப்பம் எழாது பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 வேதாத்திரியம் : 

"போரில்லா நல்லுலகம், பொருள் துறையில் சமநீதி 

நேர்மையான நீதிமுறை, நிலவுலகுக்கோர் ஆட்சி, 

சீர்செய்த பண்பாடு. சிந்தனையோர் வழி வாழ்வு, 

சிறப்புணர்ந்த பெண்மதிப்பு, தெய்வ நீதி வழி வாழ்தல்,

தேர்திருவிழா தவிர்த்தல், சிறுவர்கட்கே விளையாட்டு.

 செயல்விளைவு உணர்கல்வி, சீர்காந்த நிலை விளக்கம். 

பார்முழுதும் உணவுநீர் பொதுவாக்கல், 

பல கடவுள் பழக்கம் ஒழித்து உண்மை ஒன்றை வழிபடுதல்.

இப்பதினான்கு திட்டங்களும் இணைந்த ஒரு தொகுப்பே 'வேதாத்திரியம்' என்பதாகும். அறிஞர் பெருமக்கள், சமுதாயத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆராய்ந்து இவற்றைச் செயல்படுத்த வேண்டும். 




No comments