வேதாத்திரி மகரிஷி கூரிய எளிய உணவு முறை!

எளிய உணவு முறை


 "காலையிலே புஞ்சை தானியத் தாலான

கஞ்சி யொன்று தேங்காயோ டெங்கும் ஒக்கும் 

வேலை முடிந்திட்ட பின்னர் பகல் சாப்பாடு 

விதவிதமாய்க் கறிவகையோ டரிசிச்சாதம்

மாலையிலே காய்கறிகள், கோதுமையின்

மாக்கொண்டு தயாரிக்கும் உணவு போதும்.

 பாலைத்தனியாய்க் காய்ச்சி இனிப்பும் கூட்டி

பருகிடலாம். டீ காப்பி தேவையில்லை"

என்று எளிய உணவு முறையை வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்.



காலை ஐந்து மணிக்கு அனைவரும் எழுந்து உடல் சுகாதார வசதிகளையும் உடற்பயிற்சிகளையும் முடித்துக் கொண்டு,

 ஐந்தரை மணி முதல் ஆறு மணி வரையில் தியானத்தில் இருந்து, காலைக் கடமைகளை முடித்துவிட வேண்டும்.

 ஆறரை மணி முதல் ஏழு மணிக்குள் புஞ்சை தானியத்தாலாகிய கஞ்சியைத் தேங்காயுடன் சேர்த்து உண்ணலாம்.

பகல் பதினொன்றரை முதல் பன்னிரண்டரை மணிக்குப் பகல் சாப்பாடு அரிசிச் சாதம், காய்கறிகள், நெய் இவற்றைச் சாப்பிடலாம்.

மாலை வேளையில் கோதுமை மாக்கொண்டு தயாரித்த ரொட்டியைப்போல் உள்ள - மீதியானால் கெட்டுப் போகாத -  ஆகாரத்துடன் காய்கறிகள், பலகார வகைகள் ஆகிய வற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். பாலைத் தனியாகக் காய்ச்சி, இனிப்பும் கூட்டி கிடைக்கும் அளவுக்கேற்றபடியும் தேவைக்கேற்றபடியும் சாப்பிடலாம். காப்பி, டீ நரம்புகளைத் தூண்டி  உற்சாகப்படுத்துகின்ற மற்ற எந்த வகையான பானங்கள் முதலியவை தேவையில்லை.

இந்த உணவுத்திட்டம் பொதுவாக உலகில் எல்லா வெப்ப தட்ப நிலைக்கும் பொருந்தும். நேரத்தை மட்டிலும் ஆங்காங்குள்ள வெப்ப தட்ப நிலைகளுக்கேற்ப மாற்றிக்கு கொள்ளலாம்.






No comments